அடிப்படைகள்

எக்கங்கார் என்பதன் அர்த்தம் இறைவனின் சக பணியாளர். இறைவனின் அன்பிற்கு ஒரு விழிப்படைந்த, வாழும் கருவியாக ஆவதே ஒவ்வொரு ஆன்மாவின் விதியாகும்.

எக் என்பதன் மற்றொரு சொல் தூய இறையாற்றல் அல்லது வாழ்க்கை ஆற்றல் ஆகும், அதை ஜோதி மற்றும் சப்தம் ஆக அனுபவிக்க முடியும். அது செவிமடுத்து கேட்கக்கூடிய வாழ்க்கை அலைகள் என்றும் அறியப்படுகிறது. ஆன்மாவால் இந்த வாழ்க்கை அலைகளுடன்—இறைவனின் குரலுடன் ஒன்றிணைய முடியும்.

எக் என்பது எக்கங்காரைச் சுருக்கமாக அழைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தப் போதனைகள், எந்தவொரு வடிவத்தில் இருந்தாலும், மனித வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே பூமியில் உள்ளன. மக்கள் இறைவனை அடைய எப்போதுமே ஒரு நேரடியான வழி இங்கு இருந்திருக்கிறது.

இன்றைய எக்கங்காரின் சொற்கள் பல, அவற்றின் வரலாற்று வேர்கள் தூர கிழக்கில் இருப்பதைக் கண்டுபிடிக்கின்றன; இருப்பினும், அவை எக்கங்காரில் அவற்றின் சொந்த அர்த்தத்தையும், பயன்பாட்டையும் கொண்டுள்ளன.

பலர் இறைவனைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு புதிய வழிக்குத் தயாராக இருந்தபோது, 1965-ஆம் ஆண்டில் பால் டிவிச்செல் [Paul Twitchell] அவர்களால் எக்கங்கார் நவீன உலகிற்குக் கொண்டு வரப்பட்டது.

ஆன்மீகச் சுதந்திரம் என்பது எக்கங்கார் போதனைகளின் மையக் கோட்பாடு ஆகும். ஒவ்வொரு ஆன்மாவும் தன்னை-உணர்தல் மற்றும் இறைவனை-உணர்தல் ஆகியவற்றுக்கான ஒரு பயணத்தில் உள்ளது. ஒருவர் விழிப்புணர்வின் உயர்ந்த நிலைகளுக்குச் செல்லும்போது, மனம், உணர்ச்சிகள், கர்மா, மற்றும் மறுபிறவி ஆகியவற்றின் கட்டுப்பாடுகளிலிருந்து ஆன்மா விடுதலை அடைகிறது. இந்தச் சுதந்திரத்துடன் கட்டுப்பாடற்ற அன்பு, ஞானம் மற்றும் பொறுப்புணர்ச்சி வந்தடைகிறது.

எக் பாதை ஆன்மாவினுடைய தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் கொண்டாடுகிறது. அந்த வகையில், ஆன்மீகச் சுதந்திரம் எக்கங்காரின் கலாச்சாரத்தில் மற்றும் நிறுவன ரீதியிலும் நீதிநெறிகள் மற்றும் மதிப்புகளையும் ஊக்குவிக்கின்றன.

இந்த விளக்கங்கள் அனைத்துமே பொருந்தும், இருப்பினும் எக்கங்கார் ஒரு ஆன்மீகப் போதனை அல்லது பாதை என்று மாணவர்கள் பெரும்பாலும் விவரிக்கிறார்கள்.

எக்கங்கார் நேரடியான தனிப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது, மேலும் தத்துவம் மற்றும் மரபுவழி மதத்திற்கு அப்பாற்பட்டது. உண்மையான ஆன்மீக அனுபவங்களை—இறைவனின் இறுதியான அனுபவத்தையும் கூட—இந்த வாழ்நாளிலேயே மக்கள் பெறுவதற்கு நடைமுறை வழிகளை இது வழங்குகிறது. ஆன்மாவால் உண்மையின் பாதையைக் கண்டுபிடித்து மேலும் அந்தப் பாதையாகவே மாற முடியும்.

உலகெங்கிலும் உள்ள 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் எக்கங்கார் மாணவர்களைக் கொண்டுள்ளது, மேலும் அதன் போதனைகள் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி-பெயர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு இலாப நோக்கற்ற மத அமைப்பு போன்றது மற்றும் ஸ்தாபனமுமாகும், மேலும் இது அமெரிக்காவிலும் மற்றும் நாற்பதற்கும் மேற்பட்ட நாடுகளிலும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் எக் கோயில்கள், எக் மையங்கள் மற்றும் வாசிப்பு அறைகள் உள்ளன. எக்கங்காரின் உலகளாவிய ஆன்மீக மையம் அமெரிக்காவின் மினசோட்டாவில் உள்ள சென்ஹாசனில் உள்ளது

நம்பிக்கைகள்

ஆம், இன்னும் அதிகமாக, அவர்கள் இறைவனை அனுபவிக்கிறார்கள்.
இறைவனின் யதார்த்தத்தைப் பற்றி விவரிக்கப் போதுமான அளவு வார்த்தைகள் இல்லை.

மேலான இறைவன், படைத்தவர் என்பது ஒன்றே; அது ஆண் அல்லது பெண் அல்ல என்று எக்கங்கார் [Eᴄᴋᴀɴᴋᴀʀ] போதிக்கிறது. இறைவனுடைய ஆன்மீகச் சாராம்சம் தெய்வீக அன்பாகும், மேலும் வாழ்க்கையை வழங்கும் இந்த அலைகளை—எக் [ECK]—ஜோதி மற்றும் சப்தம் ஆக அனுபவிக்க முடியும்.

இறைவனை அன்பு மற்றும் கருணை பெருங்கடல் என்று அடையாளப் பெயரிட்டு நீங்கள் சொல்லலாம். நிழல்கள் இல்லாத ஜோதி. அது கட்டுப்பாடற்ற அன்பு, விழிப்புணர்வு மற்றும் நிலைத்திருத்தல்—வடிவமைக்கப்பட்ட மற்றும் வடிவமைக்கப்படாத அனைத்திற்கும் ஆதாரமாகும்.

எக்கங்கார் இந்த அடிப்படை நம்பிக்கைகளைப் போதிக்கிறது:

  • ஆன்மா நிலையானது.
  • ஆன்மா அதன் தனித்தன்மையை நித்தியம் முழுவதிலும் பராமரிக்கிறது.
  • இறைவன் நேசிப்பதால் ஆன்மா நிலைத்திருக்கிறது.
  • ஆன்மா தன்னை-உணரும் மற்றும் இறைவனை-உணரும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளது.
  • ஆன்மா கர்மா மற்றும் மறுபிறவி மூலமாக தன்னை-உணர்தல் உச்சத்தை அடையும் வரை ஆன்மீக ரீதியில் விரிவடைந்து கொண்டிருக்கிறது.
  • தெய்வீக இறையாற்றலாகிய, எக்கை விழிப்புணர்வுடன் தொடர்பு கொள்வதன் மூலம் ஆன்மீக விரிவாக்கம் துரிதமடைகிறது.
  • எக்கின் ஆன்மீகப் பயிற்சிகளை உபயோகப்படுத்தியும், மஹாந்தா [MAHANTA], வாழும் எக் சத்குருவின் வழிகாட்டுதலின் மூலமாகவும் தெய்வீக இறையாற்றலுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
  • ஆன்மப் பயணம், கனவுகள் மற்றும் பிற ஆன்மீக நுட்பங்கள் மூலம் ஆன்மீக உலகங்களை உங்களால் தீவிரமாக ஆராய முடியும்.
  • இந்த வாழ்நாளில் ஆன்மீக அனுபவமும், விடுதலையும் அனைவருக்கும் கிடைக்கும்.

எக்கங்கார் ஒரு ஆழமான தனிப்பட்ட ஆக்கப்பூர்வ பயிற்சி முறையாகும். நீங்கள் ஆழ்நிலை ஆய்விற்கான கலையைக் கற்றுக்கொள்ள முடியும்—அது ஒரு “உட்புறச் செயலாக்கம்”, அதன் அர்த்தம் இறையாற்றலின் உட்புற உலகங்களை ஆராய்வதற்காக ஆன்மீகக் கண்ணை விழிப்படைய வைப்பதாகும். ஒவ்வொருவரும் ஒரு தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பது போலவே, ஒவ்வொருவரின் உட்புற அனுபவமும் தனித்தன்மையாக இருக்கிறது.

ஒரு நாளைக்கு இருபது நிமிடங்கள் எக்கின் ஆன்மீகப் பயிற்சிகளைப் பழகுவதற்கு எக்கிஸ்டுகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தப் புனிதமான தொடர்பை, உணவை உட்கொள்வதைப் போன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு வழக்கமான முறையாக உருவாக்கும் போது அது ஒருவர் தேடும் உட்புற ஊட்டச்சத்தைக் கொண்டு வருகிறது.

அன்புடனும், ஆச்சரியத்துடனும் அணுகக்கூடிய இந்த ஆக்கப்பூர்வமான பயிற்சிகள் ஆன்மாவை மேம்படுத்தி, இறைவனின் ஜோதி மற்றும் சப்தம் ஆகியவையின் ஒரு நேரடியான அனுபவத்தை வழங்குகின்றன.

நாம் ஒவ்வொருவரும் ஆன்மா, இறைவனின் ஒரு தெய்வீக, நித்தியத் தன்மைக் கொண்ட சுடர் ஆவோம். ஆன்மீக அனுபவத்தைப் பெறுவதற்காகவே நாம் இவ்வுலகிற்கு வந்திருக்கிறோம்.

ஸ்தூல உலகில் பல பிறவிகளின் மூலமாக, நாம் ஒவ்வொருவரும் இறைவனைப் போன்ற நமது உள்ளார்ந்த தன்மைகளுடன் ஒரு முழுமையான தெளிவுணர்வை அடைந்து, இறைவன் நேசிப்பதைப் போல நேசிப்பதற்கான நமது விதியை நிறைவேற்ற வந்திருக்கிறோம்.

கர்மா மற்றும் மறுபிறவி ஆகியவை எக்கங்காரின் முதன்மையான நம்பிக்கைகளாகும். காரணம் மற்றும் விளைவு என்ற ஆன்மீகச் சட்டத்தின் விளைவாக நாம் கர்மாவை உருவாக்குகிறோம். எக் (தூய இறையாற்றல்) கர்மாவைத் தீர்க்க உதவுகிறது, இந்த வாழ்நாளில் நாம் ஒரு சம நிலையைக் கண்டறிந்து இறைவனின் முழுமையான அன்பை ஏற்றுக்கொள்வதற்கு அது சாத்தியமாக்குகிறது. நாம் ஞானம், தர்மம், மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைப் பெறுகிறோம். நாம் இறைவனுடைய அன்பின் ஒரு தனிப்பட்ட வெளிப்பாடாக மாறுகிறோம்.

இயேசு, புத்தர் மற்றும் முகமது போன்ற மதங்களின் தலைவர்களையும் மற்றும் பிற மதங்களின் முக்கியப் பங்குகளை எக்கங்கார் அங்கீகரிக்கிறது. பால் டிவிச்செல்லின் [Paul Twitchell] Stranger By the River [ஸ்ட்ரேஞ்சர் பை தி ரிவர்] புத்தகத்தில், இயேசு கொண்டு வந்த அன்பின் செய்தியைப் பற்றி அழகுடனும் மற்றும் உத்வேகத்துடனும் பேசும் பகுதிகள் இருக்கின்றன.

ஒவ்வொரு ஆன்மாவும் அதனுடையச் சுய வழியில் இறைவனை அடையும் பாதையில் செல்வதற்கான சுதந்திரத்தையும் மற்றும் வாய்ப்பையும் எக்கங்கார் எளிதாக எடுத்துக் காட்டுகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியமும் ஆன்மாவின் பயணத்தில் ஒரு வேறுபட்ட அனுபவத்தை அளிக்கிறது. பிறரின் தனியுரிமை, நம்பிக்கைகள் மற்றும் மதச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று எக்கிஸ்டுகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

இல்லை. இறைவனின் வீட்டை அடையும் மிக நேரடியான பாதையை எக்கங்கார் வழங்கினாலும், தெய்வீகத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான வழி இந்த ஒன்று மட்டும் அல்ல.

மனிதகுலத்தை ஆன்மீக ரீதியில் உயர்த்துவதற்காக, தூய இறையாற்றலாகிய, எக்கினால் அனைத்து மெய்யான மதங்களும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

இறைவனிடம் செவிமடுத்து கேட்பதுதான் உண்மையான பிரார்த்தனையின் மையமாக இருக்கிறது என்று எக்கங்கார் கற்பிக்கிறது. ஒருவர் இறைவனிடம் கேள்விகள் அல்லது உதவியைக் கேட்கலாம், இருப்பினும் உண்மையான பிரார்த்தனை என்பது உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையின் மூலமாகவும் இறைவன் தானாகத் தன்னை வெளிப்படுத்துவதைக் கேட்பதில்தான் அது உள்ளடங்கி இருக்கிறது.

எக்கிஸ்டுகள் நிபந்தனைகளற்ற பிரார்த்தனையைச் செய்கின்றனர். அது “உங்களின் விருப்பப்படி நடக்கட்டும்” அல்லது “இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும்” என்ற ஒரு நேர்மையான முறையில் வழங்குவதை வெளிப்படுத்தப்படலாம். இது மிகப்பெரிய ஞானத்திற்காக இதயத்தைத் திறக்கும் வேளையில், ஒருவருடைய அக்கறைகளையும் மற்றும் கவலைகளையும் இறைவனிடம் சமர்ப்பணம் செய்வதற்கான ஒரு வழியாகும்.

ஒருவரின் பிரார்த்தனைக்கான அணுகுமுறை எதுவாக இருந்தாலும், குறிக்கோளானது இறைவனின் அன்பிற்காக இதயத்தைத் திறப்பதேயாகும்.

தியானத்தின் பல்வேறு வகைகள் இன்று பிரபலமான பயிற்சி முறையாக இருப்பினும், நிறைய மக்கள் இதைவிட இன்னும் பெரியதான ஒன்றைத் தேடுகிறார்கள். எக்கங்கார் ஆழ்நிலை ஆய்வு தியானத்தைக் கற்பிக்கிறது—அது தெய்வீக இறையாற்றலுடன் இணைவதற்கான ஒரு செயலாக்கத்துடன் கூடிய, ஆக்கப்பூர்வ மற்றும் தனிப்பட்ட அணுகுமுறையாகும்.

ஆழ்நிலை ஆய்வு தியானத்திலும் மற்றும் தினசரி வாழ்க்கையிலும் பயன்படுத்தக்கூடிய நூற்றுக்கணக்கான ஆன்மீகப் பயிற்சிகள் இங்கே உள்ளன. உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு சவாலுக்கும் அல்லது ஆன்மீக விருப்பத்திற்கும் ஏற்ற ஒன்றை நீங்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

எக்கின் ஆன்மீகப் பயிற்சிகள் வாழ்க்கையின் நயத்துடன் எளிதாகப் பொருந்துவதைப் பற்றி இதற்கு முன்பு தியானத்தை முயற்சித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆன்மீகத் தலைவர் மற்றும் எக் [ECK] சத்குருமார்கள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதகுலத்திற்குச் சேவைப் புரிந்த, இறைவன்-உணர்தலை அடைந்தவர்கள் எக் சத்குருமார்கள் ஆவார். சிலர் நன்கு அறியப்பட்ட வரலாற்றுப் பிரபலங்கள். உதாரணமாக, பித்தகோரஸ், மிலரெபா, எபிக்டெட்டஸ் மற்றும் ஷாமூஸ்-ஈ-டாபிரிஸ் போன்றவர்கள். இருப்பினும் பெரும்பாலானவர்கள் எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் அமைதியாக சேவையைச் செய்துள்ளனர். தெய்வீக இறையாற்றலின் தூய ஜோதிகளான அவர்கள், வாழ்க்கைக்கான சத்குருமார்கள்.

எக்கங்காரைப் [Eᴄᴋᴀɴᴋᴀʀ] பற்றி கேள்விப்படுவதற்கு முன்பே உலகெங்கிலும் உள்ள மக்கள் எக் சத்குருமார்களுடன் தனிப்பட்ட அனுபவங்களைப் பெற்றுள்ளனர். கனவுகள், நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு உதவியை அடைதல் அல்லது குழந்தைப் பருவத்தில் தோன்றும் “கற்பனை” நண்பர்கள் ஆகியவை பொதுவான அனுபவங்களாக இதில் அடங்கும். உங்களுடைய அழைப்பின்றி எக் சத்குருமார்கள் உங்களின் உலகிற்குள் நுழைய மாட்டார்கள்.

இந்தக் கதைகளில் சிலவற்றை நீங்கள் படிக்கலாம் மற்றும் இந்த எக் சத்குருமார்கள், சிலரின் படங்களைப் பார்க்கலாம். அவர்களை உட்புற அனுபவத்தின் மூலமாக நீங்களே சந்திப்பதுதான் இதைவிடச் சிறப்பாக இருக்கும். அதுதான் மெய்யான சான்றாகும்.

மஹாந்தா [Mᴀʜᴀɴᴛᴀ], வாழும் எக் சத்குருவைப் போன்ற ஆன்மீக வழிகாட்டிகள் தூய இறையாற்றலுடன் ஒரு சிறப்பான தொடர்பைக் கொண்டுள்ளனர். உண்மையான ஒரு ஆன்மீகச் சத்குரு என்பவர் இறைவனின் குரலுக்கான ஒரு கருவியாகும். மக்களால் புரிந்து கொள்ளும் விதத்தில் சேவையைப் புரியவும், அன்றாட வாழ்வில் தெய்வீக இறையாற்றலின் செயல்பாடுகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் அவர் மானிட உருவத்தில் தோன்றுகிறார்.

எக்கங்காரில், தெய்வீக இறையாற்றல் தன்னை மஹாந்தா, வாழும் எக் சத்குருவின் மூலமாக வெளிப்படுத்துகிறது. இங்கேயும் மற்றும் உட்புற உலகங்களிலும் உள்ள ஆன்மாக்களுக்கு அவரால் உதவவும் மற்றும் கற்பிக்கவும் முடியும் என்ற காரணத்தினால், அவர் வெளிப்புற ஆசான் மற்றும் உட்புற ஆசான் என்ற இரட்டைப் பங்களிப்பின் மூலமாகச் சேவை புரிகிறார். அவருக்கு உயரிய மரியாதை வழங்கப்படுகிறது ஆனால் அவரை வழிபடுவதில்லை.

ஒருவருடைய ஆன்மீக முன்னேற்றத்தைப் பொறுத்து அவரது தலைவிதியை மாற்றியமைக்க மஹாந்தா, வாழும் எக் சத்குருவால் முடியும். இது ஒரு குறிப்பிடத்தக்க நன்மையாகும். இந்த வழியில், உதாரணமாக, அதிகப்படியான கர்மாவைக் கனவு நிலையில் சமன் செய்ய முடியும்,

மஹாந்தா என்பது வாழும் எக் சத்குருவின் உட்புறம் அல்லது ஆன்மீக வடிவமாகும். இது மனிதருக்குத் தெரிந்த இறை விழிப்புணர்வின் மிக உயர்ந்த நிலை மற்றும் தெய்வீக இறையாற்றலின் ஒரு வெளிப்பாடாக, அவர் எப்போதும் உங்களுடன் இருப்பதாகும். கனவுகள், ஆன்மப் பயணம் மற்றும் எக்கின் ஆன்மீகப் பயிற்சிகள் மூலமாக மஹாந்தா உட்புற வழிகாட்டுதலை வழங்குகிறார்.

வழிகாட்டுவது அல்லது ஆன்மீக வழிகாட்டியாகச் சேவைப் புரிவதுதான் மஹாந்தா, வாழும் எக் சத்குருவின் பங்காகும். அவர் தயாராக இருக்கும் ஆன்மாக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார் மேலும் இறைவனின் வீட்டை அடையும் பாதையில் அவர்களுக்கு வழிக்காட்டுகிறார்.

ஒவ்வொரு புதிய வாழும் எக் சத்குரு தேர்வும் சூக்மாத் [Sᴜɢᴍᴀᴅ], (எக்கங்கரில் இறைவனுக்கான பெயர்) இடமிருந்து தொடங்குகிறது. வாழும் எக் சத்குரு தனக்கு அடுத்து பொறுப்பேற்க இருப்பவருக்குப் பயிற்சியளித்து மேலும் அவரின் பெயரைக் குறிப்பிடுகிறார்.

1981 ஆண்டு, ஹெரால்ட் கிளம்ப் (Harold Klemp) பல பிறவிகளின் ஆன்மீகப் பயிற்சிகளுக்குப் பிறகு, மஹாந்தா, வாழும் எக் சத்குரு ஆனார். 1981 ஆண்டு உலகளாவிய எக் கருத்தரங்கத்தில் அவருக்கு முந்தைய வாழும் எக் சத்குருவால் அவர் அறிவிக்கப்பட்டார்.

ஆம். பால் டிவிச்செல் ஒரு தலைசிறந்த தொகுப்பாளராக இருந்தார். வெவ்வேறு மதங்களில் மூலமுதலான எக்கின் போதனைகள் சிறு, சிறு விஷயங்களாக நிறைந்திருந்தன, ஆனால் அவற்றுடன் அவர்கள் தங்களின் சொந்த நிபந்தனைகளை இணைத்திருந்தனர். உதாரணமாக, ஒருவர் சைவ உணவு உண்பவராக இருக்க வேண்டும், அல்லது இறைவனை அடையும் பாதையில் உண்மையான சீடராக இருப்பதற்கு ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட சில மணிநேரம் தியானிக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். மூலமுதலான எக்கின் படைப்புகளில் இருந்து பெறப்பட்ட முந்தைய போதனைகள், பண்டையக் கலாச்சாரங்களின் ஆன்மீகத் தேவைகளுக்கு ஏற்புடையதாக இருந்தன.

காலத்திற்கு ஏற்றால் போல் பொருந்தவும் மற்றும் கடந்த காலத்தில் என்ன கொடுக்கப்பட்டதோ அவற்றின் மிகச் சரியான பகுதிகளைச் சேகரிப்பதும் பால் அவர்களின் பணியாக இருந்தது. அவர் உலகம் முழுவதும் சிதறி இருந்த பொன்னான போதனைகளைச் சேகரித்து, கலாச்சாரப் பிடியிலிருந்தும் மற்றும் ஒளிர்மிக்க ஆன்மீக விஷயங்களைக் கட்டுப்படுத்திய சமூக நோக்கங்களிலிருந்தும் அவைகளை விடுவித்தார். பால் இந்தச் சிறு, சிறு துண்டுகளை மறுசீரமைத்து, இறைவனின் வீட்டிற்கு நேரடியாகச் செல்லும் பாதையைக் காட்டி, அது அனைவருக்கும் உடனடியாகக் கிடைக்கும்படியும் செய்தார்.

எந்தவொரு பெண்ணோ அல்லது ஆணோ இந்த வாழ்நாளில் இறைவன்-உணர்தலை அடைவதுடன், மேலும் எக் சத்குருவாக ஆக முடியும். ஒவ்வொரு நபரின் மெய்யான அடையாளம் ஆன்மா என்றும் அது எந்தப் பாலினத்தையும் சாராமல் இறைவனைப் போன்றது என்றும் எக்கின் போதனைகள் அங்கீகரிக்கிறது.

மஹாந்தா, வாழும் எக் சத்குருவாகப் பங்கை ஏற்றுக் கொள்ளும் பயிற்சியில் இருக்கும் ஒவ்வொரு ஆன்மாவும், அந்த வாழ்நாளில் ஒரு ஆண் உடலைத் தேர்வு செய்கிறது. ஆன்மீகத் தலைவராக ஆவதற்குப் பௌதிக உலகில் ஆன்மாவிற்கு ஒரு ஆண் உடலின் அணு அமைப்பு தேவைப்படுகிறது. அந்தத் தேர்வு பிறப்பதற்கு முன்பே ஏற்படுத்தப்படுகிறது.

செப்டம்பர் 1971-ம் ஆண்டில் பால் டிவிச்செல்லின் இறப்பிற்கு பிறகு, டார்வின் கிறாஸ் [Darwin Gross], அக்டோபர் 1971-ம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் இடைக்கால வாழும் எக் சத்குருவாகச் சேவை புரிந்தார். அக்டோபர் 1981-ம் ஆண்டில், 973-வது வாழும் எக் சத்குருவாக, ஹெரால்ட் கிளம்ப் அவர்களைக் கிறாஸ் அறிவித்தார். ஆனால் அவர் இப்போதனைகளின் ஆன்மீகத் தலைவராக இனி தொடர முடியாது என்பதைக் கிறாஸ் ஏற்கத் தவறிவிட்டார், மேலும் அவர் எக்கங்காரிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஸ்ரீ ஹெரால்ட் எக்கங்காரின் அந்தக் காலகட்ட வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஆன்மீகப் பாடங்களைப் பற்றி தமது புத்தகமான Soul Travelers of the Far Country [சோல் டிராவலர்ஸ் ஆஃப் தி ஃபார் கன்ட்ரி], அத்தியாயம் 11-ல் எழுதி இருக்கிறார். ஸ்ரீ ஹெரால்ட் கிளம்ப் இன்று வரை எக்கங்காரின் ஆன்மீகத் தலைவராகத் தொடர்ந்து சேவை புரிகிறார்.

மேம்பட்ட ஆன்மீக வாழ்க்கை

பதிவு செய்தல் என்பது ஆண்டு சுழற்சியாக உட்புற மற்றும் வெளிப்புற ஆன்மீக ஆய்வுகளாகும். உயர்ந்த ஆன்மீக விரிவாக்கத்திற்கான இந்த அர்ப்பணிப்பு இரண்டு முக்கிய விஷயங்களை உள்ளடக்கியது:

வாழும் வாழ்க்கை முறைகளில் வியக்கத்தக்க மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியம் இங்கில்லை. தனிப்பட்டவர், அது அவரோ அல்லது அவளோ, அவர்களுடையச் சுய தனித்துவமான வழியில் வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்வதோடு அன்றாட வாழ்க்கையில் முழுவதுமாகத் தனிப்பட்ட பொறுப்பையும் மற்றும் விருப்பத்தேர்வையும் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

இயன்றவரை, எக்கங்கார் மக்களின் நிதி சூழ்நிலைமையைப் பொருட்படுத்தாமல் போதனைகள் அவர்களை சென்றடையும் படி செய்கிறது. எக்கின் பணிக்கு நன்கொடை அளிக்க மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். நன்கொடை வழங்குவதற்கான அவர்களின் முடிவு தனிப்பட்டது மற்றும் மரியாதைக்குரியது. அனைத்து நன்கொடைகளும் நன்றியுடன் பெறப்படுகின்றன.

தனிப்பட்டவர்களின் ஆன்மீக விரிவாக்கத்திற்கும் அவர்கள் அளிக்கும் நன்கொடைக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை.

பதிவுச் செய்வதற்கான செலவு அல்லது நன்கொடை உள்ளதா?

உறுப்பினர்களுக்கு வருடத்திர நன்கொடை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டு மாணவர்களுக்கு, நன்கொடை ஒரு தனிநபருக்கு $75-ல் தொடங்கி, அல்லது ஒரு குடும்பத்திற்கு $150 வரையிலும், (வளரும் நாடுகளைச் சார்ந்த தனிநபருக்கு $50 அல்லது ஒரு குடும்பத்திற்கு $75) என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எக்கின் படிப்பைப் பற்றி மேலும் படிக்கவும் அல்லது இன்றே பதிவு செய்யவும்.

ஆம், எக்கின் போதனைகள் உங்களுக்குப் பொருத்தமானதாக உள்ளதா என்பதை நீங்களே சோதித்துப் பார்க்கலாம். தொடர்வதற்கான ஒப்பந்தக் காலம் என்று எதுவும் இங்கே இல்லை, மேலும் எந்த நேரத்திலும் இடையில் நிறுத்துவதற்கான சுதந்திரம் உங்களுக்கு உள்ளது.

ஆம். மஹாந்தா [Mᴀʜᴀɴᴛᴀ], வாழும் எக் சத்குருவின் வழிகாட்டுதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் அவரைப் பின்பற்றும் அனைவருடனும் அவர் ஆன்மீக ரீதியில் பணியாற்றுவார். இருப்பினும், மேம்பட்ட ஆன்மீகப் படிப்பைத் தொடர்ந்து கொண்டு, வாழும் எக் சத்குரு வழங்கும் ஆன்மீகப் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே எக்கின் உபதேசங்கள் கிடைக்கும்.

நீதிநெறி, ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை முறைகள்

ஒவ்வொரு எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவை தனிப்பட்டவரின் பொறுப்பு என்று எக்கிஸ்டுகள் நம்புகிறார்கள். கர்மாவின் சட்டம் (காரணம் மற்றும் விளைவு) ஆன்மாவிற்குத் தவறுகளிலிருந்து சரியானதைக் கற்பிக்கிறது.

அன்றாட வாழ்வில் நீதிநெறி மற்றும் ஒழுக்கம் ஒரு திசைக்காட்டியாக இருப்பதற்காக, வரலாற்று ஆசிரியர் ரிச்சர்ட்டு மேபரி மனிதகுலத்தின் நீதிநெறி, சட்டம் மற்றும் மத மரபுகளிலிருந்து வடிவமைத்த “இரண்டு சட்டங்களை” ஸ்ரீ ஹெரால்ட் கிளம்ப் (Sri Harold Klemp) பரிந்துரைத்துள்ளார்:

  • நீங்கள் செய்வதாக ஒப்புக்கொண்ட அனைத்தையும் செய்யுங்கள், மற்றும்
  • மற்ற நபர் அல்லது அவர்களுடைய சொத்துக்களின் மீது ஆக்கிரமிப்பு செய்யாதீர்கள்.
    இந்தச் சட்டங்கள் ஆன்மீகச் சுதந்திரத்திற்கான திறவுகோலாகும்.

சேவை என்பது ஆன்மா இயற்கையாகவே வாழ்க்கையின் பரிசுக்கு நன்றி செலுத்தும் வழியாகும்.

இறைவனுக்கு ஒரு சக பணியாளராக ஆவதுதான் ஒவ்வொரு ஆன்மாவின் விதியாகும், அது ஆன்மா தனித்துவமான சுய வழியில் அனைத்து வாழ்க்கைக்கும் சேவை செய்வதாகும். இதுதான் எக் பாதையின் நாடித்துடிப்பாகும்.

நீங்கள் உங்களையே அளிப்பதற்கென பல வழிகள் உள்ளன. அது உங்கள் குடும்பம், சமூகம், மக்கள், அல்லது மதச் சமுதாயம் ஆகியவற்றுக்கு உணர்வுபூர்வமாக அன்பு மற்றும் அக்கறையை வழங்குவதாகக் கூட இருக்கலாம்.

தெய்வீக இறையாற்றலுடன் தங்களின் தனிப்பட்ட சுய ஒப்பந்தங்களின்படி எக்கின் மாணவர்கள் சேவையை புரிகிறார்கள். சேவை என்ற ஆன்மீகத் தேவையைக் கற்றுக்கொள்வதுதான் ஆன்மாவின் பயணத்திற்கு முழுமையான காரணமாகும்.

இல்லை. ஒருவருடைய நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது திணிப்பதும் அல்லது ஒரு ஆன்மீகப் பாதையில் எவர் ஒருவரையும் பிடித்து வைத்திருப்பதும் ஆன்மீகச் சட்டத்திற்கு எதிரானது. எக்கின் போதனைகள் இரக்கம், மரியாதை, தனிப்பட்ட பொறுப்பு மற்றும் மற்றவர்களுக்குச் சுதந்திரம் அளிப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

எக்கிஸ்டுகள் ஒரு சமூக ரீதியான வாழ்க்கை முறையைத் தழுவுவதில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்கிறார்கள், குடும்பம், வேலை வழங்குபவர், மற்றும் நாட்டிற்கான தங்களின் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள். எக்கிஸ்டுகள், வாழ்க்கையின் அனைத்து தரப்பிலிருந்தும் வந்தவர்கள், உலகம் முழுவதும் 120-க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள பிரதான சமூகத்தில் வாழ்கின்றனர்.

கருக்கலைப்பு பற்றிய தனிப்பட்டவர்களின் கருத்துக்களை எக்கங்கார் மதிக்கிறது, அதே சமயம், வாழ்க்கையின் முதல் சுவாசத்தில்தான் ஆன்மா உடலுக்குள் நுழைகிறது என்ற கண்ணோட்டத்தை எக்கின் போதனைகள் வழங்குகிறது.

உடல் ஆரோக்கியம், கருணைக்கொலை மற்றும் கருக்கலைப்பு போன்ற தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிய தங்களின் சுய முடிவுகளை தனிப்பட்டவர்கள் எடுக்கிறார்கள்.

ஆம். ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஜோடிகள் எக்கின் குடும்ப உறுப்பினர்களாக இணைந்து படிக்கலாம். மேலும், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணங்கள் எக்கின் திருமண விழாவாக, எக்கங்காரால் நியமிக்கப்பட்ட எக் கிளர்ஜிகளால் [ECK Clergy] வழிநடத்தப்படுகின்றன.

Copyright © 2020–2025 ECKANKAR. All rights reserved. The terms ECKANKAR, ECK, EK, MAHANTA, SOUL TRAVEL, and VAIRAGI, among others, are trademarks of ECKANKAR, PO Box 2000, Chanhassen, MN 55317-2000 USA. 200140